ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் செய்தது உறுதியான நிலையில், அவருக்கு அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு முதலீட்டு நிறுவனமான எம்டிபியில் ஊழல் செய்தது தொடர்பாக ஏற்கனவே
நஜிப் ரசக்-ற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.