ஃப்ளேவர் ஃப்ளேவர்ரா... டிசைன் டிசைன்னா... ஐஸ்கிரிம் சாப்புட்ரிங்க..!

Update: 2023-07-23 12:33 GMT

"சம்மார் வந்துட்டா போதும் கடை கடையா ஏறி இறங்கி விதவிதமா ஐஸ்கிரிம் வாங்கி நம்மல பாக்க வச்சே சாப்புடுவானுங்க...

ஆனா... நமக்கு மட்டும் அதே பழைய சோத்தப் போட்டுட்டு, இதுதாம்பா ஆரோக்கியமானது சாப்புட சொல்லுவானுங்க...

சரி அப்படியே அலுது புரண்டு "ஐஸ்கிரிம் வாங்கி குடுங்க மகாபிரபுனு" அடம்புடிச்சாலும், என்ன ஃபிளேவர்னே தெரியாத ஐஸ்க்ரீம வாங்கி குடுத்துட்டு ஏதோ வள்ளல் பரம்பரை மாதிரி போஸ் குடுப்பாங்க...

இருங்கடா... கூடிய சீக்கரம்... இந்த அனியாயத்த தட்டிக்கேக்க ஒருத்தன் வருவான்... அப்போ உங்க எல்லாரையும்... பாக்க வச்சு நாங்க மட்டும் ஐஸ்கிரிம் சாப்புடுவோம்ன்டா''

இந்த மாதிரி மைன்ட் வாய்ஸ்லயே... மனுசங்களுக்கு சாபம் விட்ட நாய்களோட... ஏக்கத்த தீர்க்றதுக்காகவே வந்துருக்கு இந்த ஐஸ்கிரீம் கடை...

ஜெர்மன்ல இருக்குற பெர்லின்ல தான் இந்த ஐஸ்க்ரீம் கடை இருக்குது...

வழக்கமா இந்த பகுதில டாக்கோட வாக்கிங் வர கஸ்டமர்ஸ் ஐஸ்கிரீம் சாப்பிடும் போது கூட வர்ர டாக்ஸ்லாம் அவங்கல சாப்பிட விடாம எனக்கும் தாங்கனு சொல்லி தொல்ல பண்ணிருக்கு, இத பார்த்த கடைகாரர்... நாய்களோட ஆசைய புரிஞ்சுக்கிட்டு, நாய்களுக்காககவே தனி ஃபிளேவர்ல வித்யாசமான ஐஸ்கிரீம ரெடி பண்ணி வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுடாரு...

இதனால வெயில்ல வேர்க்க விறுவிறுக்க வாக்கிங் போற டாக்குகள்லாம் இந்த கடைய பாத்ததும்... சினுங்கி சவுண்டு விட ஆரம்பிச்சுருதுங்களாம்...

அதுகப்புறம் ஐஸ்க்ரீம் பிரியர்களான இந்த நாய்களுக்கு... ஸ்டாபெரி, வெண்ணிலானு மனுசங்க சாப்புட்ற மாதிரியே பல வெரைட்டியான ஃபிளேவர்ல ஐஸ்கிரீம்ம சப்ளே பண்ணிக்கிட்டு இருக்காப்பல இந்த ஸாப் ஓனர்...

கடை காரரே உங்களுக்கு... நாய்களுக்கு மத்தியில செம டிமாண்ட் தான் போங்க..

Tags:    

மேலும் செய்திகள்