ஈபிள் கோபுரத்திற்கு மேலே ஒளிர்ந்த வானவேடிக்கை.. களைகட்டிய பாஸ்டில் தின கொண்டாட்டம்..
பிரெஞ்சுப் புரட்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பாஸ்டில் சிறைச்சாலை தாக்கப்பட்டதை பாஸ்டில் தினம் நினைவு கூருகிறது. இந்த நாள் பிரான்சில் தேசிய விடுமுறையாக மாறியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் கெளரவ விருந்தினரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.