திருப்பத்துர் - நாட்றம்பள்ளி
வேலை வாங்கித் தருவதாக மோசடி...
பல லட்சங்களை சுருட்டிய துபாய் ரிட்டன்...
போலி பாஸ்போர்ட், பிளைட் டிக்கெட்...
வேலை வாங்கித் தருவதாக மோசடி...
நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாக பல லட்சங்களை சுட்டியிருக்கிறார் ஒரு துபாய் ரிட்டன். போட்டோ ஷாப்பை வைத்து போர்ஜரி செய்தவர் கைதான கதை இது.
வெளி நாட்டில் வேலைக்கு அனுப்புவதாகச் சொல்லி, ஏமாற்றும் ஒரு டுபாக்கூர் புரோக்கர் பற்றி சினிமா காட்சிகள் தான் இது
இரண்டு ஜெராக்ஸ் மிஷின்களையும் , கம்பியூட்டரையும் வைத்து பாஸ்போர்ட் முதல், வீசா வரை போலியாக தயரித்து விபூதி அடிக்கும் இந்த கும்பலை போலவே இங்கொருவர் நிஜத்தில் பல லட்சங்களை சுருட்டி இருக்கிறார்.
பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்படும் இந்த ஆசாமியின் பெயர் தான் அப்தூல் ரஹீம். ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னதாக துபாயில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த பாபு என்பவரும் அப்தூல் ரஹீமும் ஒரே இடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். இதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளி நாட்டு வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த இருவரும் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள்.
பாபு அவரது ஊரில் கிடைத்த வேலையை செய்து கொண்டு செட்டிலாகி இருக்கிறார். ஆனால் அப்தூல் ரஹீமை dirhems அளவுக்கு ரூபாயால் திருப்திபடுத்த முடியாமல் போயிருக்கிறது. இதனால் குறுக்கு வழியில் கொள்ளை லாபம் பார்க்க நினைத்த அப்தூல் ரஹீம், பல வருடங்கள் பழகிய பாபுவிடமே கம்பி நீட்ட தொடங்கி இருக்கிறார்.
பல நாடுகளில் தனக்கு இருக்கும் காண்டெக்டுகளை பயன்படுத்தி
வேலை வாங்கி தருகிறேன் உனக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வா என ஆஃபர் கொடுத்திருக்கிறார்.
தற்போது நியூசிலாந்தில் கார்பன்டர், எலெக்ட்ரிஷின் ஸ்விப்பர் உட்பட பல வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறியவர், தலைக்கு ஒரு லட்சம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி இருக்கிறார்.
இதை நம்பிய பாபு, தனக்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் என 20க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வாங்கி அப்தூல் ரஹீமிற்கு அனுப்பி இருக்கிறார்.
அதே போல் பாபுவின் நண்பரானா மற்றொருவரும், அவருக்கு தெரிந்த18 பேரிடம் பணம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 48 லட்சம் ரூபாயை அப்துல் ரஹீமின் பாக்கெட்டில் கொட்டி இருக்கிறார்கள்.
ஆனால் மொத்த பணத்தையும் வாங்கிய அப்துல் ரஹீம், வேலையை ஏற்பாடு செய்யாமல் திடிரென சைலண்ட் மோடுக்கு போயிருக்கிறார். இன்று, நாளை என பல மாதங்களாக இழுத்தடித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் வாடிகையாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, போலியாக பாஸ்போர்ட், விசா போன்றவறை தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் வேலை பற்றி எந்த தகவலும் சொல்லாமல், ஊரை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார். இதனால் சந்தேகமடைந்தவர்கள்
அவரை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி தருமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால் பனத்தை கொடுக்காமல் மீண்டும் தனது ஃபோர்ஜரி வேலையை காட்டி இருக்கிறார் அப்துல் ரஹீம்.
பழைய விமான டிக்கெட்டில், பயணிகளின் பெயர்களை அழித்துவிட்டு, அதில் பணம் கொடுத்தவர்களின் பெயர்கள் இருப்பது போல ஃபோட்டோ ஷாப் செய்து அனுப்பி இருக்கிறார். ஆனால் அந்த டிக்கெட்டை பார்த்ததும் அது போலி என தெரிந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த பாபு, காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார். அப்துல் ரஹீமின் செல் போன் சிக்னலை ட்ராக் செய்து அவரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். மேலும் இவருக்கு உதவியாக இருந்த இரண்டு நபர்களையும் தேடி வருகிறார்கள்.