குமரிக்கு வந்த ஐரோப்பிய பறவைகள் - அரசு வெளியிட்ட அறிக்கை...கழுகுப் பார்வை காட்சி ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு பருவமழை காலம் இருப்பதாலும், இயற்கை வளம் மிகுதியாக காணப்படுவதாலும் அதிக குளங்கள், நன்னீர் பகுதிகள் உள்ளன. இதனால், மேலை நாடுகளில் கடுங்குளிர் வாட்டும்போது உணவு, உறைவிடம், பாதுகாப்பு கருதி வெளிநாட்டு பறவைகள் கன்னியாகுமரியில் தஞ்சம் அடைந்து வருகிறது. இதற்காக சுசீந்திரம் குளம், தேரூர் குளம், மணக்குடி காயல் பகுதிகள் பறவைகள் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்பிரே, புளோவர், டெர்ன், பிளமிங்கோ, ரோஸி ஸ்டார்லிங் உள்ளிட்ட பறவைகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்துள்ளன.