#BREAKING || திடீரென காவல் நிலையம் முன் குவிந்த 500க்கும் மேற்பட்டோர் - காரணம் இதுதான்
கடலூரில் வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவரை விடுவிக்க கோரி காவல் நிலையத்தை 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டுள்ளனர்.
கடலூர் வடக்கு ராமாபுரத்தை சேர்ந்த தனசேகரன் வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார்.
தனசேகர் இன்று தங்களது ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு தரப்பினரை பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை தொடர்ந்து வடக்கு ராமபுரத்தை சேர்ந்த தனசேகரை போலீசார் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யப்பட கூடும் என்பதால் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவளும் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
முற்றுகை காரணமாக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.