ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தைகள் விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணனுண்ணி ஆலோசனை நடத்தினார். தேர்தல் நடத்தை விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு நடைபெறுவதாகவும் கூறினார்.