பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு விதை போட்டவர் முதல்வர் ஸ்டாலின் என்பதால், திமுக-வை குறிவைத்து அமலாக்கத்துறை ஏவிவிடப்படுவதாக முரசொலியில் கட்டுரை வெளியாகி உள்ளது.
2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. அதற்கு இந்திய தேசிய வளர்ச்சி கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படி ஒரு கூட்டணியை இந்தியா முழுமைக்கும் உருவாக்க அயராது பாடுபட்டவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் மார்ச் 1ஆம் தேதி சென்னையில் நடந்த முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அவர் போட்ட விதை ஜூலை 18ஆம் தேதி முளைத்திருப்பதாகவும் முரசொலி தலையங்க கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அதனால் தான் அமலாக்கத்துறையை ஏவி திராவிட முன்னேற்ற கழகம் குறிவைக்கப்படுவதாக கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.