பெண்களை 4 மணி நேரமாக சிறைபிடித்த தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் - திருப்பூரில் பரபரப்பு

Update: 2022-09-29 09:19 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, தனியார் நிதிநிறுவன ஊழியர்கள், பெண்களை சிறைபிடித் மிரட்டி பணம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல்லடத்தை அடுத்த செந்தூரன் காலனி பகுதியை சேர்ந்த 13 பெண்கள், தனியார் நிதி நிறுவனத்தில் குழுவாக இணைந்து கடன் பெற்றுள்ளனர். இந்த குழுவில் இருந்த பெண் ஒருவர் இறந்த நிலையில், மேலும் இருவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். மாதத்தவணை கட்ட இருவர் காலதாமதம் செய்யவே, செந்தூரான் காலனிக்கு வந்த நிறுவன ஊழியர்கள், தவணை கட்ட வந்த பெண்களை சிறைபிடித்து, வேறு இடத்திற்கு குடிபெயர்ந்த இருவரின் பணத்தையும் செலுத்தக் கூறி மிரட்டியுள்ளனர். குடிபெயர்ந்த இரு பெண்களும், தவணைத் தொகையை செலுத்தி விடுவதாக தொலைபேசியில் தெரிவித்தும், அதனை ஏற்காத ஊழியர்கள், சுமார் 4 மணி நேரம் பெண்களை சிறைபிடித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கிராம மக்கள், நிதி நிறுவன ஊழியர்களை பிடித்ததுடன், காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பெண்களிடம் நிதி நிறுவன ஊழியர்கள் அடாவடித் தனமாக நடந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்