கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை..பீதியில் உறைந்த மக்கள்
வடக்கு சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மேற்கு சுமத்ரா மாகாணங்கள் கடுமையாக குலுங்கிய நிலையில், அப்பகுதிகளில் வசித்த மக்கள் அலறியடித்து வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்நிலையில், கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்குப் பிறகு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.