கழுத்தில் சிக்கிய பைப்.. நாய்க்குட்டிக்கு உதவிய சிறுவர்கள் - வெளியான வைரல் வீடியோ

Update: 2025-01-05 02:35 GMT

மதுரை அவனியாபுரத்தில் நாய்க்குட்டியின் கழுத்தில் சிக்கி இருந்த பிவிசி பைப்பை அகற்ற உதவிய சிறுவர்களின் செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலில் நாய்க்குட்டியின் நிலையை கண்ட சிறுவர்கள், விலங்குகள் நல ஆர்வலருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், நாய்க்குட்டியை பத்திரமாக மீட்ட விலங்குகள் நல ஆர்வலர், கழுத்தில் சிக்கி இருந்த பைப்பை அகற்றியதுடன், மருத்துவமனைக்கு தூக்கி சென்று காயத்திற்கு சிகிச்சையும் அளித்துள்ளார். 6 மாத நாய்க்குட்டியின் கழுத்தில் பிவிசி பைப்பை மாட்டிவிட்ட சமூக விரோதிகளின் மத்தியில், காப்பாற்றிய சிறுவர்களின் செயலை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்