"தல மாறி சொன்ன வாக்கு மீறாம இருங்க"...விஜய்யை வம்பிழுக்கும் அஜித் Fans - முட்டு தர முடியாமல் திணறும் விஜய் Fans

Update: 2023-06-27 07:21 GMT

நடிகர் விஜய்யின் லியோ படப் பாடலில் போதை பழக்கத்தை ஊக்குவிப்பதாக விஜய் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. .

நா ரெடி தான் வரவா என்ற பாடல் வரி மூலம் அரசியல் வருகையை குறித்து தான் சூசகமாக சொல்கிறாரா என அனைவரும் சிந்திக்க.. சிகரெட்டுடன் விஜய் இருக்கும் ஸ்டைலிஷ் போஸ்க்கு தான் அதிக விமர்சனம் எழுந்தது.

பொதுவாகவே விஜய் படத்தின் போஸ்டர் முதல் க்ளைமேக்ஸ் காட்சிகள் வரை அனைத்தும் சர்ச்சைகளிலும், புகார்களிலும், விமர்சனங்களில் சிக்கும். அப்படி தான் நா ரெடி தான் வரவா பாடலும் சிக்கியுள்ளது.

பாடலாசிரியர் விஷ்ணு எடவன் வரிகளில், அனிருத் இசையில் உருவான பாடலில் அசல் கோளாறு ராப் பாடியுள்ளார். முக்கியமாக தனது குரலியேயே பாடி ரசிகர் களுக்கு ட்ரீட் கொடுத்த விஜய், அனல் பறக்கும் நடனத்தால் ரசிகர்களை மேலும் குஷி படுத்தியுள்ளார்.

ஆனால் பாடலில் நடிகர் விஜய் சிக்னேச்சர் ஸ்டெப்பில் கூட வாயில் சிகரெட் வைத்தபடியே ஆடியிருப்பார். பாடலின் இடையே வரும் மன்சூர் அலிகானோ மதுபாட்டிலை சியர்ஸ் அடித்த படியே காட்ட மதுவை ஊக்குவிப்பதாகவும், ரசிகர்கள் மீது அக்கறையின்றி படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

பாடல் வரிகளிலும் "விரல் இடுக்குல தீ பந்தம் நான் ஏத்ததான்", "பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டாள கொண்டா சியர்ஸ் அடிக்க" போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இது மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை glorify செய்வது போலவே அமைந் திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், ஆர் கே செல்வம் என்பவர், லியோ பட பாடல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில்ஆன்லைன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நடிகர் விஜய் பாடல் மூலம் போதை பழக்கத்தையும், ரவுடியிசத்தையும் ஊக்குவிப்பதாகவும், அவர் மீது போதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

விஜய் போன்ற நட்சத்திர நடிகர்கள், திரையில் செய்வதை அப்படியே ஃபாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம் உள்ளதால் அவர்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

இது ஒரு புறமிருக்க ரசிகர்களுக்காக புகை பிடிக்கும் காட்சிகளை அறவே மறுத்துள்ள நடிகர் அஜித்தை சுட்டிக்காட்டி விஜய் ரசிகர்களை சீண்டி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்