"பைக் நல்லா ஓடுமா சார்?" ...Wrong டிரைவ் ஆன Test டிரைவ் - சென்னையில் OLX-ல் நடந்த கூத்து..!
சென்னையில் வடிவேல் பட பாணியில், சுமார் 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக இரு சக்கர வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறி ஒருவர் திருடி சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுல்பி கராலி. இவர் தனது 13 லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக இரு சக்கர வாகனத்தை விற்க உள்ளதாக கூறி ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சுல்பி கராலியை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், வாகனத்தை வாங்க உள்ளதாகவும், தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரியில் தான் இருக்கிறேன் என கூறி வாகனத்தை ஓட்டி பார்க்க கேட்டுள்ளார். அப்போது, சுல்பி கரோலி வீட்டில் இல்லாததால் முதலில் வாகனத்தை ஓட்டி பார்க்க அனுமதி வழங்க மறுத்திருக்கிறார். பின்னர், வீட்டின் அருகில் உள்ள சாலையில் மட்டும் ஓட்டி பார்க்க அனுமதி வழங்கிய நிலையில், அந்த நபர் வாகனத்தை எடுத்து தலைமறைவாகியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சுல்பி கராலி சிசிடிவி ஆதாரங்களுடன் போலீசில் புகாரளித்துள்ளார். மேலும், வாகனத்தை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் சுல்பி கராலி தெரிவித்துள்ளார்.