விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இல்லம் அருகே, திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
அப்போது பறை வாசிக்கப்பட்ட நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், விழுப்புரம் திமுக செயலாளர் சர்க்கரை ஆகியோர் குத்தாட்டம் போட்ட சம்பவம் பார்ப்போரை வியக்க வைத்தது.
அமைச்சர் பொன்முடி கைதட்டி உற்சாகமாக ரசித்தார்.