திமுக பிரமுகர் கொலைக்கு..! பழிக்கு பழி..! கொடூரமாக கொலை செய்த இளைஞர்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

Update: 2023-07-25 06:14 GMT

திண்டுக்கல் அருகே மாலப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் மீது 4 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, 2 இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. முகம் முற்றிலும் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே முனீஸ்வரன் உயிரிழந்தார். தகவலறிந்து சென்று உடலைக் கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த வாரம் திமுக பிரமுகர் பட்டறை சரவணன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஆசிக் முகமதுக்கு பக்கபலமாக இருந்த‌தோடு, வெளியில் இருந்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்த‌தாக தெரிய வந்த‌து. பட்டறை சரவணன் கொலைக்கு பழிக்குப்பழியாக முனீஸ்வரன் கொலை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றினர். மேலும் சில முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்