அதிமுக நிர்வாகி அதிரடி கைது - திண்டுக்கல்லில் பரபரப்பு | aiadmk | arrest | dhindigul
- திண்டுக்கல்லில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 2 பெண்களிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த அதிமுக பிரமுகரை, போலீசார் கைது செய்தனர்.
- திண்டுக்கல் பகுதியை சேர்ந்த எலிசெபெத் மற்றும் சுகுந்தா ஆகியோரிடம், குரும்பபட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகரான மணி என்பவர், பள்ளி கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, 10 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.
- ஆனால் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் போக்குகாட்டி வந்த மணி மீது, பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.