இந்தியன் வங்கியிலிருந்து கட்டு கட்டாக பணத்தை அள்ளி ஓடினாரா கேஷியர்? - திடீர் திருப்பம்.. ஆடியோவால் பரபரப்பு
விழுப்புரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து, சுமார் 44 லட்ச ரூபாயை திருடி சென்றதாக கூறப்படும் வங்கியின் காசாளரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
https://youtu.be/7P1wCAGG6zQவிழுப்புரம் சிந்தாமணி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காசாளராக பணியாற்றி வரும் முகேஷ் என்பவர், வங்கியிலிருந்து 43 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவ்வங்கியின் மேலாளர் அளித்த புகாரின் பேரில், 3 தனிப்படைகள் அமைத்த போலீசார், முகேஷின் செல்போனை ட்ராக் செய்துள்ளனர். இதில் அவர் சென்னையில் இருப்பது தெரியவந்ததையடுத்து, தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு முகேஷை தேடி வருகின்றனர். இதனிடையே முகேஷின் உறவினர்கள், முகேஷ் பணத்துடன் கடத்தப்பட்டதாக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதேபோல் தன்னை சிலர் கடத்தி அடைத்து வைத்துள்ளதாக, முகேஷ் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.