பஸ் ஸ்டாண்டில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்து தாக்கிய சம்பவம் - ஒருவர் அதிரடி கைது | Harur

Update: 2023-04-01 08:08 GMT
  • அரூர் அருகே சட்டக் கல்லூரி மாணவியை கிண்டல் செய்து தாக்கிய நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
  • தர்மபுரி மாவட்டம், கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியை, முத்தானூர் பேருந்து நிறுத்தம் அருகே சிலர் கிண்டல் செய்ததாக தெரிகிறது.
  • இதனால் கோபமடைந்த மாணவி அவர்களை திட்டியதால், மாணவி மற்றும் அவரது தாயாரை அந்தக் கும்பல் தாக்கியுள்ளனர்.
  • இது குறித்து நியாயம் கேட்கச் சென்ற அவர்களது உறவினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
  • இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்