முடிவுக்கு வந்த 14 மணி நேர சிபிஐ சோதனை.. டெல்லி துணை முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு | DelhiDeputycm
மத்திய அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக, டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக, டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீடு உட்பட, அவரக்கு சொந்தமான இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 14 மணி நேர சோதனைக்கு பின், மனிஷ் சிசோடியா வீட்டில் இருந்து சிபிஐ அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மனிஷ் சிசோடியா, நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனவும், தனது கணினி மற்றும் தொலைபேசியை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார். டெல்லி அரசின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை தடுக்க, மத்திய அரசு சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.