இறக்கும் முன்பே பாட்டிக்கு இறப்பு சான்றிதழ்... அதிகாரிகளின் தூக்கத்தை தொலைத்த ரயிலில் தொலைந்த சான்றிதழ்
கோவையில், மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.;
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த ரயிலில் பயணி ஒருவர் இறப்பு சான்றிதழ் ஒன்றை மறந்து விட்டு விட்டு சென்றுள்ளார். அதனை கண்டெடுத்த ரெயில் பயணி ஒருவர் சான்றிதழை மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலாளர் பிரசன்னாவிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் ரயில் நிலைய மேலாளர் பிரசன்னாஇதுகுறித்து வாட்ஸ் ஆப் குழுக்களில் தகவல் அனுப்பியதன் மூலம் சான்றிதழுக்கு உரியவர்கள் ரயில் நிலையம் வந்து சான்றிதழை பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில் வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிட்ட சான்றிதழ் தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சான்றிதழில் மூதாட்டியின் பெயர் ரங்கம்மாள் எனவும்,இறந்த தேதி 18-05-1999 என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சான்றிதழ் வழங்கிய தேதி 09-06-1990 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கினாலே இந்த தவறு நிகழ்ந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த சான்றிதழ் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.