சிறுவனுக்கு உதட்டில் முத்தமிட்ட தலாய் லாமா.. "எனது நாக்கை உறிஞ்சு"வைரலான வீடியோ - கொந்தளித்த நெட்டிசன்கள்

Update: 2023-04-10 09:49 GMT
  • சிறுவனுக்கு முத்தமிட்டு தனது நாக்கை உறிஞ்சுமாறு கேட்டதற்கு, திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா மன்னிப்பு கோரி உள்ளார்.
  • திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய் லாமா, ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் சிறுவனுக்கு உதட்டில் முத்தமிட்டதோடு, தனது நாக்கை உறிஞ்சுமாறு சிறுவனிடம் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பலர், சிறுவனை பாலியல் ரீதியாக தலாய் லாமா சீண்டியதாகவும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
  • இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தலாய் லாமா மன்னிப்பு கோரி உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தலாய் லாமா, தான் கூறிய வார்த்தைகள் புண்படுத்தியதற்காக, சிறுவனிடமும் அவரது குடும்பத்தினரிடமும், உலகம் முழுவதும் உள்ள சிறுவனின் நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்