பண்ருட்டி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் நடைபெற்ற மோதல் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-10-29 04:38 GMT

பண்ருட்டி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் நடைபெற்ற மோதல் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் திருவதிகை செட்டிப்பட்டறை நகர் பகுதியிலுள்ள அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது தேர்தல் முன்விரோதம் காரணமாக, விசிக கவுன்சிலர் கார்த்திகேயன் தரப்பினருக்கும், திமுக நிர்வாகி குமார் தரப்பினருக்கும் மோதல் வெடித்து, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டத்தில் திமுக நிர்வாகி குமார், அவரது குடும்பத்தினர் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கவுன்சிலர் கார்த்திகேயன் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார், மேலும் 9 பேரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்