தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் கடைவீதிகளை நோக்கி படையெடுக்கும் நிலையில், வெளியூர் மக்கள் பேருந்து நிலையங்களை நோக்கி படையெடுக்க உள்ளனர். கோவையில் சிங்காநல்லூர், காந்திபுரம், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய 4 பேருந்து நிலையங்களில் வெளியூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வெளியூர் பேருந்து நிலையங்களுக்குச் செல்ல, கூடுதல் நகர பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.