மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.."உடனே தொடங்குங்கள்.." மத்திய அரசு அவசர உத்தரவு

Update: 2023-03-26 11:10 GMT

கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு ஒத்திகை பயிற்சிகளுக்கு தயாராகுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா மற்றும் பருவநிலை மாறுபாடு காரணமாக பரவும் காய்ச்சலை எதிர்கொள்ளும் வகையில், நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11ம் தேதிகளில் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், மொத்த பாதிப்புகளில் 26.4 சதவீதம் பேர் கேரளாவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்