கண்டெய்னர் லாரி மோதி மூதாட்டி பலி.. லாரியை சிறைபிடித்து சாவிகளை பிடுங்கிய உறவினர்கள் | Kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது கண்டெய்னர் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கண்டெய்னர் லாரியை சிறைபிடித்த மூதாட்டியின் உறவினர்கள், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே, லாரியில் இருந்த சரக்குகளை யாருக்கும் தெரியாமல் வேறொரு கண்டெய்னர் லாரியில் எடுத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த மூதாட்டியின் உறவினர்கள், ஓட்டுநர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இரண்டு லாரிகளின் சாவிகளையும் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.