சலனத்தை ஏற்படுத்திய கோவை சம்பவம்..கோயிலுக்கு வருகை தந்த ஜமாத்துகள்... வாசலுக்கு வந்து அழைத்துச் சென்ற அர்ச்சகர்கள்

Update: 2022-11-04 08:33 GMT

சலனத்தை ஏற்படுத்திய கோவை சம்பவம்..கோயிலுக்கு வருகை தந்த ஜமாத்துகள்... வாசலுக்கு வந்து அழைத்துச் சென்ற அர்ச்சகர்கள்

மத நல்லிணக்கமும், சகிப்புத்தன்மையும் மரபணுவில் கொண்ட இந்தியாவில், இந்த கோட்பாட்டை உணர்த்தும் சம்பவங்கள் பல... அதற்கு ஊறுவிளைவிக்க முயற்சிக்கும் சம்பவங்களையும் மக்கள் அன்பால் வென்று, இந்திய ஒற்றுமையை உலகறிய செய்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவம் சலனத்தை ஏற்படுத்தியது. அந்த சலனத்தையும் அன்பால் தெளிய செய்திருக்கிறார்கள் இந்துக்களும், இஸ்லாமியர்கள். மாவிலை தோரணம் தொங்க, வேதங்கள் முழங்கும் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர் வந்தனர். அவர்களை வாசலுக்கு வந்து அழைத்துச் சென்றனர் அர்ச்சகர்கள்...உக்கடம் கோட்டைமேட்டில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான பெரிய பள்ளிவாசல், சிறிய பள்ளி வாசல், கேரளா பள்ளிவாசலை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இணையத்துல்லா தலைமையில் கோவிலுக்கு வந்தனர். அலுவலக அறையில் செயல் அலுவலர் பிரபாகர், தலைமையில் அனைவரும் கலந்துரையாடினர். சிறு பிராய நினைவுகளை பகிர்ந்துகொண்டவர்கள், தேர்த் திருவிழா, கடை விதி நினைவுகள்... பண்டிகைகால கொண்டாட்ட மகிழ்ச்சிகள் என பல நினைவுகளையும் வெளிப்படுத்தி தங்கள் மன மகிழ்வை வெளிப்படுத்திக்கொண்டனர். கோவிலுக்கு வருகைபுரிந்த இஸ்லாமியர்களுக்கு அர்ச்சகர்கள் பட்டுத் துண்டை மரியாதை நிமித்தமாக அணிவித்து அகம் மகிழ்ந்தனர். வாசல் வரைக்கும் வந்து இஸ்லாமியர்களை அர்ச்சகர்கள் அனுப்பி வைத்த போது, அன்பு எவ்வளவு மேலானது என்பதை உலகறியச் செய்ய இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறியது நெகிழச் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்