முதலமைச்சராக பதவியேற்று கொண்ட பின் முதல் முறையாக ரயிலில் பயணிக்க இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 8 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தென்காசி செல்ல இருக்கிறார்.
முதலமைச்சராக பதவியேற்று கொண்ட பின் முதல் முறையாக ரயிலில் பயணம் மேற்கொள்ள இருக்கும் முதல்வர், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்காசி புறப்பட உள்ளார்.
அங்கு அரசு நிகழ்ச்சியில் கலந்த கொண்ட பின் மதுரை வரும் முதல்வர், மதுரை மாநகராட்சி வளைவு மற்றும் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து அன்றிரவே சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.