தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணை வீசிய சீனா.!! பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள போர் பயிற்சி.!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணை வீசிய சீனா.!! பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள போர் பயிற்சி.!
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து சென்றதை கண்டிக்கும் வகையில் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு, சீனாவின் எதிர்ப்பை மீறி, தைவானுக்கு, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலுசி சென்றார். இதனை காரணமாக வைத்து சீனா, தைவான் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியோரம் அமைந்துள்ள எல்லைப்பகுதியில், சீனா ஏவுகணை பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. சீனாவின் இந்த செயலால், பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.