தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், 'நம்ம ஸ்கூல்' எனும் திட்டத்தை, தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று, பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக இருக்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள், அரசுப் பள்ளியை தத்தெடுக்க முடியும்.
அவர்களின் உதவியோடு பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாக, இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இதனிடையே, இதற்கான இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்த இணையதளம் மூலம் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதி உதவி அளிக்கலாம்.
மேலும், நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.