சைடிஷை சாப்பிட்டதால் ஆத்திரத்தில் நண்பனை வெட்டி கொன்ற பயங்கரம்.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி
பீகாரை சேர்ந்தவர் முகமது அசார். இவர், சென்னை அண்ணாசலையில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், அங்கு முகம்மது அலி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நைனியப்பன் தெருவில் முகமது அசார் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், நண்பர்களுடன் சேர்ந்து முகமது அலி மது அருந்தியதாகவும், அப்போது அங்கு வந்த முகமது அசார், முகமது அலியின் சைடிஷை எடுத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் முகமது அசாரை, முகமது அலி கொன்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில், ரயில் மூலமாக பீகார் தப்பி சென்ற முகமது அலியை விஜயவாடாவில் வைத்து கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.