'அக்னிச் சிறகே.. எழுந்து வா..' ஆண்களுக்கு நிகராக ராணுவ பயிற்சியில் அசத்தும் பெண்கள்.. வருங்கால இந்தியாவை பாதுகாக்க கடினமான பயிற்சி

Update: 2023-03-04 09:32 GMT
  • பூவை போன்ற மென்மையான கைகளில் துப்பாக்கி ஏந்தும் பாவைகள்....
  • புள்ளி மான் போல் துள்ளி குதித்து பயிற்சி எடுக்கும் இவர்கள், வருங்காலத்தில் இந்தியாவை பேணி காக்கும் தூண்கள்...
  • ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சென்னை பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆண் ராணுவ அதிகாரிகளுக்கு இணையாக பெண் அதிகாரிகளுக்கும் சரி நிகர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • அதிகாலை 5 மணி முதல் தொடங்கும் பயிற்சியில் ஓட்டம், பரேடு, யோகா, விளையாட்டு, ஆயுத பயிற்சி, நிர்வாகம், தலைமை பண்புகள் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. மீண்டும் மாலை விளையாட்டு, ஓன்று கூடி திட்டமிடல் என இரவு 9 மணி வரையில் பயிற்சி நீடிக்கும். இதில் ஆண் பெண் என பாகுபாடு கிடையாது.
  • இந்த பயிற்சியில் மிடுக்கான ராணுவ உடையில் பூட்ஸ் கால்களால் லெப்ட், ரைட் என துப்பாக்கிகளை கைகளில் ஏந்திய படி, குழுவாக பரேடில் ஈடுபடுவதும் ஆயுதத்துடன் எதிரியை தாக்கி அழிக்கும் காட்சிகள் கவனத்தை ஈர்க்கிறது.
  • 10 மாதங்கள் நடைபெறும் கடின பயிற்சியில் பெண் அதிகாரிகளும் சமூகத்தில் தங்களின் திறமைகளை வெளிக்காட்டவும் நாட்டுக்காக பணியாற்றும் வாய்ப்பை பெறவும் கடும் சவால்களை எதிர்கொள்கிறார்கள்.
  • இந்திய பாதுகாப்பில், மணி மகுடமாக திகழும் ராணுவத்துறைக்கு, பெண் ராணுவ அதிகாரிகள் ஒளி வீசிடும் வைர கற்களாய் திகழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
Tags:    

மேலும் செய்திகள்