ஆன்லைனில் கடன் வாங்கியவருக்கு நேர்ந்த கொடுமை.. குண்டு தயாரிப்பதாக கோர்த்துவிட்ட லோன் APP - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
ஆன்-லைனில் கடன் வாங்கி கட்டாத நபரை நூதன முறையில் போலீசில் சிக்க வைக்க ஆன்லன் நிறுவனம் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில காவல் கட்டுபாட்டு அறைக்கு வந்த அழைப்பு ஒன்றில், ஜப்பானில் இருந்து பேசுவதாகவும், மாங்காடு அடுத்த முத்தமிழ் நகர் பகுதியில் கபீர் அகமது என்பவர் வெடிகுண்டு பொருட்களை தயாரித்து வருவதாகவும் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். விசாரணையில், கடந்தாண்டு சாலை விபத்தில் படுகாயமடைந்த கபீர் அகமது, ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலம் சுமார் 5 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடனை சரி வர கட்டாததால், கபீர் அகமதுவை நூதன முறையில் போலீசில் சிக்க வைக்க ஆன்லைன் நிறுவனம் முயன்றது தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.