காற்றாடியை பிடிக்க முயன்று தவறி விழுந்து சிறுவன் அடுத்து நடந்த விபரீதம். "இப்ப அவனால வாழும் 7 பேர்"

Update: 2023-06-06 12:34 GMT

சென்னை சூளைமேடு பாரதி தெருவை சேர்ந்த தையல் தொழிலாளி தண்டபாணியின் 2வது மகனான, 13 வயதாகும் பிரசன்னா, தனது நணபர்களுடன் பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது காற்றாடி அறுந்து வருவதை பார்த்து அதனை பிடிக்க பின்தொடர்ந்து சென்றார். ஒரு வீட்டின் மீது விழுந்த காற்றாடியை, 2-வது மாடிக்கு சென்று பிடிக்க முயன்றபோது தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில், அவரது தந்தை, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரசன்னா உயிரிழந்தார். பிரசன்னாவின் கண் மற்றும் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. தங்களை விட்டு மகன் பிரிந்தாலும் வேறொருவர் மூலம் மகன் வாழ்வதாக என எண்ணிக்கொள்வதாக தண்டபாணி உருக்கத்துடன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்