10 குழந்தைகளை காவு வாங்கிய ஹாஸ்பிடல்... நாட்டை உலுக்கிய கோரத்தில் அரங்கேறிய அடுத்த அதிர்ச்சி

Update: 2024-11-17 06:11 GMT

உத்தபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் வருவதற்கு முன்பாக வி.ஐ.பி. வருகைக்கான ஏற்பாடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசு பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்து, லைன் போடும் காட்சிகளை பகிர்ந்து இருக்கும் காங்கிரஸ் கட்சி, பாஜக அரசின் உணர்வற்ற நிலையை காட்டுவதாக விமர்சித்துள்ளது. பல தரப்பில் எதிர்ப்புகள் எழுந்த வேளையில், வி.ஐ.பி. வரவேற்பு ஏற்பாடுகளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பிரஜேஷ் பதக் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்