ஓட்டலில் சாப்பிடும் போது கணவன் மனைவிக்கு அடி-உதை - சென்னையில் அதிர்ச்சி
குரோம்பேட்டை ரேடியல் சாலையில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த கணவன் - மனைவி தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கணபதிபுரத்தை சேர்ந்த அமுதன், அவரது மனைவி புவனாவுடன் காரில் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். கார், அங்கு நின்று கொண்டிருந்த முதியவர் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முதியவரின் மகன் மகேந்திரன் ஓட்டலுக்குள் சென்று அமுதன்-புவனாவை தாக்கியுள்ளார். இதுகுறித்து புவனா அளித்த புகாரில் சிட்லபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.