வீட்டில் இருந்து வந்த கரும்புகை.. போதை மகன் செய்த காரியம்.. தாய்க்கே போன் போட்டு தகவல் | Chennai

Update: 2022-11-16 06:07 GMT

சென்னை காசிமேடு ஏஜே காலனியை சேர்ந்த ஜாமல் என்பவருக்கு சொந்தமான 2வது மாடி குடியிருப்பில் அபு ஹலிப் என்ற இளைஞர், தனது தாயுடன் வசித்து வருகிறார். கஞ்சா போதைக்கு அடிமையான அபு ஹலிப், போதையில் வீட்டின் படுக்கை அறையை கொளுத்திவிட்டு, தனது தாய்க்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். வீட்டில் புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், தகவல் அளித்ததை அடுத்து, 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. பின்னர், தீயணைப்பு வீரர்கள் போராடி, தீயை அணைத்தனர். இந்த விபத்தில், வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மெத்தை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்