“கணவன்தான் இனி எல்லாமே...“ - நம்பி வந்த மனைவிக்கு நேர்ந்த கொடுமை - கதறும் குடும்பத்தினர்
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் மீனவர் குப்பத்தை சேர்ந்த, பவுன்ராஜ் மற்றும் சுபா ஆகியோருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
குழந்தை இல்லாத காரணத்தாலும், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியும், சுபாவை அவர் கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுபா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுபா கணவரின் குடும்பத்தினர்தான் திட்டமிட்டு கொலை செய்ததாக, சுபாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து தலைமறைவான சுபா கணவரின் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.