யாத்திரையின் போது மின் கம்பியில் உரசிய ரதம்..மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

Update: 2023-06-29 07:19 GMT

உனகோட்டி மாவட்டத்தில் உள்ள சௌமுஹானி பகுதியில் ரத யாத்திரை நடைபெற்றது. ஏராளமானோர் சென்று கொண்டிருந்த போது, மின்கம்பியில் ரதம் உரசியதால் மின்சாரம் பாய்ந்து அங்கிருந்த‌வர்கள் மீது தீ பிடித்து எரிந்த‌து. அருகில் இருந்தவர்கள் தெரித்து ஓட்டம் பிடித்த நிலையில், 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் தீ பற்றி எரிந்தனர். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் கதறி அழுதனர். காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, முதலமைச்சர் மாணிக் சாகா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்