டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பாராட்டு சான்றிதழ்... கேடயம் வழங்கிய மாவட்ட நிர்வாகம் - விவாதப்பொருளான விவகாரம்

Update: 2023-01-27 05:00 GMT

கரூர் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்கு மாவட்ட நிர்வாகம், பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளது.

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கேடயமும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அந்த வகையில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்கு மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது சமூக வலைத்தளத்தில் விவாத பொருளாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்