ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire உள்ளிட்ட 14 அலைபேசி குறுஞ்செய்தி செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் உளவு அமைப்புகள் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள், தங்களின் ஆதரவாளர்களை தொடர்பு கொள்ள இந்த செயலிகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த செயல்களுக்கு இந்தியாவில் பிரதிநிதிகள் யாரும் இல்லை என்றும், தகவல் தேவைப்பட்டால் அவர்களை தொடர்பு கொள்ள வழிகளும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.