தான் அனுப்பிய நோட்டீஸிற்கு இதுவரை பதில் வராததால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வரும் 8-ஆம் தேதி கிரிமினல் வழக்கு தொடரப்போவதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பம்மலில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறினார். எனவே, அவர் மீது வரும் 8-ஆம் தேதி வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறினார்.