நிறைமாத கர்ப்பிணி மீது ஏறி இறங்கிய பஸ் - கணவன் கண்முன்னே விபத்து.. மடியில் பிரிந்த உயிர்..
சென்னை, இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தபோது, பேருந்து ஏறி இறங்கியதில் 8 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.
கடற்படையில் பணிபுரியும் ரெட்டி என்பவர், 8 மாத கர்ப்பிணியான தனது மனைவி லதாவுடன், சென்னை காமராஜர் சாலையில் மாநில கல்லூரி அருகே வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான பேருந்தின் பின்சக்கரம் லதா மீது ஏறியதில், அவர் உயிரிழந்தார்.
கணவர் லேசான காயமடைந்தார். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விரட்டிச் சென்று பேருந்தை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது, கடற்படை வீரர்கள், பொதுமக்களுடன் வாக்குவாதம் செய்து தாக்க முயன்றதால், பொதுமக்களும் கையில் கிடைத்த பொருட்களால் பேருந்தை தாக்க முயன்றனர்.
போலீசார், கடற்படை வீரர்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.