இந்த ஆண்டு பட்ஜெட் பழங்குடியினர் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தொலைதூர இடங்களையும் சென்றடைவதில் எவ்வாறு கவனம் கொண்டுள்ளது என்பது குறித்த இணைய கருத்தரங்கில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்...
அப்போது பேசிய அவர், அரசின் பணிகள் மற்றும் திட்டத்திற்கு நல்ல நிர்வாகம் மிக அவசியம் என தெரிவித்ததுடன், "பிரதமர் ஸ்வா நிதி திட்டம்" சாலையோர வியாபாரிகளை வங்கி அமைப்புடன் இணைத்து இருப்பதாக குறிப்பிட்டார்.
ஊரகம் மற்றும் பழங்குடியின பகுதியை சார்ந்த கோடிக்கணக்கான குழந்தைகள் தடுப்பூசியை பெறுவதற்காக நீண்ட காலம் வரிசையில் காத்திருந்ததாக தெரிவித்த பிரதமர் மோடி, ஆனால் தற்போது மிஷன் இந்திர தனுஷ் திட்டத்தின் மூலம் பெருமளவில் தடுப்பூசி சென்றடைந்து இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசின் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்வதோடு, அவை குறித்த நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டிலுள்ள பழங்குடி மக்களின் பரந்து விரிந்த திறமைகளை தட்டிக் கொடுக்க, முடிந்த அளவு பணியாற்றி வருவதாகவும், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.