"போரிஸ் ஜான்சனுக்கு 8,00,000 பவுண்ட் ஏற்பாடு செய்த விவகாரம்.." - BBC தலைவர் ராஜினாமா

Update: 2023-04-29 17:06 GMT

பிரிட்டன் அரசுக்கு சொந்தமான, புகழ்பெற்ற தொலைகாட்சி மற்றும் ரேடியோ செய்தி ஒலிபரப்பு நிறுவனமான பி.பி.சி நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 2021 ஜனவரியில் இதன் தலைவராக ரிச்சர்ட் ஷார்ப் பதவியேற்றார். முன்னாள்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 8 லட்சம் பவுண்டுகள் கடன் ஏற்பாடு செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைப் பற்றி

விசாரணை மேற்கொள்ளபட்டு, குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திடீரென ராஜினாமா செய்துள்ளார் ஷார்ப். 2020 இறுதியில், சாம் பிளைத் என்ற கனடா நாட்டு குடிமகனை, பிரிட்டன் சிவில் சர்வீஸ் துறையின் தலைவர் சைமன் கேஸிடம், ஷார்ப் அறிமுகப்படுத்தியிருந்தார்.

விவாகாரத்து வழக்கு, மற்றும் புதிய குழந்தை பிறப்பு காராணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த போரிஸ் ஜான்சன், 8 லட்சம் பவுண்டுகள் கடன் பெற பிளைத் ஜாமீன் அளிக்க முன் வந்தது அம்பலமாகியுள்ளது. இந்த தகவலை ஷார்ப் மறைத்து வைத்திருந்தது விதி மீறலாக கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்