சாகித்ய அகாடமி விருது 2022 "இது கண்டிப்பாக நடக்கும்"- எழுத்தாளர் மு.ராஜேந்திரன் உறுதி

Update: 2023-03-12 03:23 GMT
  • டெல்லியில் நடைபெற்ற சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழாவில், காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
  • 2022ம் ஆண்டு தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது, எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
  • இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள கமானி அரங்கில் நடைபெற்றது.
  • இதில், சிறப்பு விருந்தினரும் ஆங்கில எழுத்தாளருமான உபமன்யூ சட்டர்ஜி, சாகித்ய அகாடமியின் தலைவர் சந்திரசேகர் கம்பார் ஆகியோர், மு. ராஜேந்திரனுக்கு விருதுக்கான பட்டயத்தை வழங்கினர்.
  • மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி கவுரவித்தனர்.
  • 1801 ஆம் ஆண்டு நடந்த காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட இந்த 'காலா பாணி' நாவல் விரைவில் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளதாக கூறிய எழுத்தாளர் ராஜேந்திரன், விரைவில் திரைப்படமாக வரும் என்றார்.
  • தந்தி டிவிக்கு பிரத்யேகமாக அவர் அளித்த பேட்டியை காணலாம்......
Tags:    

மேலும் செய்திகள்