கர்நாடக சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா வாக்களிப்பதற்கு முன்பு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ஷிகாரிபுராவில் உள்ள Huccharaya சாமி கோயிலுக்கு தனது மகனுடன் சென்று மனமுருகி சாமி தரிசனம் செய்தார் எடியூரப்பா... ஷிகாரிபுராவில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து எடியூரப்பா ஷிவமொகாவில் உள்ள அதலித்த சவுதாவில் தனது வாக்கைப் பதிவு செய்து, அனைத்து கர்நாடக மக்களும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இத்தேர்தலில் மக்கள் 100 சதவீதம் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என நம்புவதாகவும், 130-135 இடங்களை பாஜக வெல்லும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.கர்நாடக சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகனும், ஷிகாரிபுரா தொகுதியின் பாஜக வேட்பாளருமான விஜயேந்திரா தனது வாக்கைப் பதிவு செய்தார். பிரதமர் மோடியின் மந்திரம், இத்தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மையை அளிக்கும் என்று தெரிவித்த அவர், தங்கள் கட்சி குறைந்தபட்சம் 130 இடங்களைப் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.