பிபர்ஜாய் சுழன்றடித்த சூறைக்காற்று..ஸ்டுடியோவிலே குடை பிடித்தபடி செய்தி வழங்கிய செய்தியாளர்..வைரல் வீடியோ

Update: 2023-06-16 11:39 GMT

பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் கடற்கரை பகுதியில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது . இதைப்பற்றி இந்தி செய்தி ஊடகத்தை சேர்ந்த ஒரு தொகுப்பாளர் ஸ்டுடியோவில் இருந்தவாறே குடையை பிடித்துக் கொண்டு சம்பவ இடத்தில் இருப்பது போல் வர்ணனை செய்து விளக்கி இருப்பார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் அதிகம் பரவியது. இந்நிலையில், "ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி" பட நடிகை ஜூஹி சாவ்லாவின் கிளிப் ஒன்றை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட அந்த படத்திலும் இதே போல் காட்சி இடம் பெற்று இருக்கும். இந்த வீடியோவை ஜூஹி சாவ்லா நகைச்சுவையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்