#BREAKING | புத்தாண்டு கொண்டாட்டம் - கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

Update: 2022-12-29 18:22 GMT

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு வரும் 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல், சென்னை கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.


சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி வரும் 31-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல், சென்னையில் உள்ள முக்கிய கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதிகளில், வரும் 31ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கூடாமல், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்