சென்னையில் நடைபெற்ற 48-ஆவது புத்தக காட்சி, ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கி,17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தகக்காட்சிக்கு 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். புத்தக காட்சியில், சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. புத்தகக்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில்,புத்தகக் காட்சி நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து கொடையாளர்கள், நிறுவனங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பாராட்டி கவுரவித்தார்.மேலும், பதிப்புத் துறையில் நூற்றாண்டு,பொன்விழா, வெள்ளிவிழா கண்ட பதிப்பாளர்களையும் அவர் பாராட்டினார்.