தாயை பிரிந்த குட்டி யானை... ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைப்பு | Elephant | Bomman | Pelli

Update: 2023-03-17 13:45 GMT

தர்மபுரி மாவட்டம் கட்டமடவு கிராமத்தில் தண்ணீர் நிறைந்த 30 அடி ஆழமுள்ள ஒரு விவசாய கிணற்றில் பிறந்து 3 மாதமே ஆன குட்டி யானை கடந்த 11ம் தேதி தவறி விழுந்தது. தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் கடுமையாக போராடி யானைக்குட்டியை மீட்டனர். அதை தாயிடம் சேர்ப்பதற்காக தொடர்ந்து 5 நாட்களாக வனத்துறையினர் போராடி வந்த நிலையில் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து யானைக்குட்டி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. நீண்ட நேரம் பயணம் மற்றும் காலநிலை மாற்றத்தால் யானை குட்டி சோர்வாக இருந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானை குட்டி அருகில் செல்ல உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த குட்டி யானையானது ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் பெள்ளி தம்பதியிடம் ஒப்படைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். முதுமலைக்கு வந்த யானை குட்டிக்கு பொம்மன் பால் ஊட்டி மகிழ்ந்தார்...

Tags:    

மேலும் செய்திகள்